சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தமிழ் அரசியற் கட்சிகளின் மோசடிகளை ஆதாரங்கள் மூலம் அம்பலப்படுத்துவேன் – துவாரகேஸ்வரன்

தமிழ் அரசியற் கட்சிகளின் மோசடிகளை ஆதாரங்கள் மூலம் அம்பலப்படுத்துவேன் – துவாரகேஸ்வரன்

(06.08.2015 – யாழ்ப்பாணம்) தமக்குரிய தரகுப்பணம் கிடைக்காமையால் சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தயாரிக்கப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை – அரசிடமிருந்து நன்கொடையாக வாகனங்கள் பெற்றமை உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட தமிழ் அரசியற் கட்சிகள் பற்றிய பிபரங்களை வீடியோ மற்றும் ஆவணச் சான்றுகளினூடாக இன்னும் ஒரு சில தினங்களில் பகிரங்கப்படுத்தப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பார் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (165.08.2015) யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இப் பரபரப்புக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி சிங்களக் கட்சி என்றும் எனவே அதனை நிராகரிக்கவேண்டும் என்றும் இங்கு வாக்குக் கேட்பவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் தேர்தல் காலங்களில் ஒன்றும் மற்றய வேளைகளில் இன்னொன்றும் கூறுபவர்கள். நாங்கள் ஆட்சிஅமைக்கப்போகும் கட்சியின் மேசையில் இருந்தால் தான் எங்கள் பிரச்சினைகள் பற்றிக் கதைக்க முடியும். எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுக்க முடியும் என்றார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com