தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவதற்கு தமிழரசுக்கட்சி இணக்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பான உடன்படிக்கையில் தமிழரசுக் கட்சி கைச்சாத்திட முன்வந்தபோதிலும், கூட்டுக் கட்சிகள் அதனை இழுத்தடிப்புச் செய்ததாலேயே இவ்வுடன்படிக்கை கைச்சாத்தாகவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது குறித்த உடன்படிக்கை சரியானதாக இருக்கும் என தான் நம்புவதாகவும் இரா. சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், புளொட் தலைமையின் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில், புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க எண்ணியுள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்கட்சிகளை நேரில் சந்தித்து பேசுவதன் மூலம் முரண்பாடுகளைத் தீர்க்க முடியும் என நம்புவதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com