சற்று முன்
Home / செய்திகள் / தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு – கிழக்கு மக்கள் நிராகரித்துவிட்டனர் – கெஹலிய ரம்புக்வெல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு – கிழக்கு மக்கள் நிராகரித்துவிட்டனர் – கெஹலிய ரம்புக்வெல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு – கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டமையை தேர்தல் பெறுபெறுகள் நன்கு புலப்படுத்தி நிற்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

“ தற்போது எதிர்க்கட்சிப் பதவி தொடர்பில் சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதனைப் பயன்படுத்தி சிலர் நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே இனவாதத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர். தமக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருவதாகக் கூறி தொடர்ந்து ஏமாற்றப்பட்டதையும், அதன் காரணமாக இனிவரும் காலங்களில் எவ்வித பயனும் இல்லை என்பதையும் உணர்ந்த தமிழ் மக்கள் யதார்த்த நிலைக்கு உட்பட்டு சுயமான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் தீர்மானத்தை மதித்துச் செயற்பட வேண்டும். மக்கள் புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் பொழுது அதற்குத் தடையாக அரசியல் சூழ்ச்சிகளை பிரயோகிப்பது அந்த மக்களுக்கு விரோதமான செயலாகவே காணப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் கூட்டு அரசின் அரசியல் நலனை மாத்திரமே பற்றி கவனம் செலுத்துகின்றார். நாட்டின் தேசிய நலன் குறிப்பாக தமது இனத்தின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தத் தவறி விட்டமையே அவரது பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனைக்கு முக்கிய காரணம் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com