சற்று முன்
Home / செய்திகள் / ”தமிழ்க் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் ஏதும் இல்லை” – நிபந்தனையற்ற ஆதரவே வழங்குகின்றது என்கிறது ஐதேக

”தமிழ்க் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் ஏதும் இல்லை” – நிபந்தனையற்ற ஆதரவே வழங்குகின்றது என்கிறது ஐதேக

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்சி எந்­த­வொரு உடன்­ப­டிக்­கை­யும் செய்­து­கொள்­ள­வில்லை. எங்­க­ளின் ஜன­நா­ய­கப் போராட்­டத்­துக்கு அவர்­கள் நிபந்தனைகளற்று ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர். இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரும், நாடா­ளு­ மன்ற உறுப்­பி­ன­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல தெரி­வித்­தார் .

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்சி எந்­த­வொரு ஒப்­பந்­த­மும் செய்­ய­வில்லை. எங்­க­ளின் ஜன­நா­ய­கப் போராட்­டத்­துக்கு அவர்­கள் ஆத­ரவு வழங்­கு­கின்­றார்­கள். அது நிபந்னைகள் ஏதுமற்று வெறும் தார்மீக ஆதரவாகவே இருக்கிறது.

நல்­லாட்சி அர­சுக்கு தலைமை தாங்க வேண்­டிய ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கள்­ளர்­க­ளுக்­கும் குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் தலைமை தாங்கி வரு­கின்­றார்.

கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணாக மகிந்­தவை தலைமை அமைச்­ச­ராக நிய­மித்து சட்­டத்­துக்கு முர­ணாக புதிய அமைச்­ச­ரவை உரு­வாக்கி ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மாக மைத்­தி­ரி­பால செயற்­பட்­டார்.

அந்த அமைச்­ச­ர­வைக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வந்து தற்­போது நாம் வெற்றி பெற்­றுள்­ளோம். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, மக்­கள் விடு­தலை முன்­னணி உள்­ளிட்ட கட்­சி­கள் அர­ச­மைப்பு மற்­றும் ஜன­நா­ய­கத்­தைப் பாது­காப்­ப­தற்­காக எம்­மு­டன் இணைந்­துள்­ளன.

ஆனால், மகிந்த அணி­யி­னர் எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை தொடர்ந்து முன்­வைத்து வரு­கின்­ற­னர் – என்­றார்.

இதே­வேளை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் இடை­யில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரவு நடைபெற்ற சந்­திப்பில் ஐக்­கிய தேசி­யக் கட்­சியை ஆத­ரிப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு சில நிபந்­த­னை­களை விதித்­தி­ருந்தாகக் கூறியுள்ளபோதிலும் அதனை எழுத்­தில் ஏற்­றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி கடி­தம் வழங்­கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com