சற்று முன்
Home / செய்திகள் / #தமிழின_அழிப்பு_நாள் – முள்ளிவாய்க்காலில் மக்களின் கதறலில் வானமும் அழுதது !

#தமிழின_அழிப்பு_நாள் – முள்ளிவாய்க்காலில் மக்களின் கதறலில் வானமும் அழுதது !

 

2009 ஆண்டு மே மாதம் இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று (18-05-2018) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் பொதுச் சுடரேற்றி நினைவு கூறப்பட்டது.

2009 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்து தானும் காயமடைந்த யுவுதியான கேசவன் விஜிதா என்பர் பொதுச் சுடரை ஏற்றிய பின்னர் தனித்தனியாக சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி யுத்தத்தில் தங்களுடைய உறவினர்களை ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவின் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலிருந்து விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட பேரூந்துகளில் பொது மக்கள் வருகைதந்திருந்தனர்.

வானமும் அழுதது

அஞ்சலி நிகழ்வுகள் முடிந்து தீபங்கள் அணையத் தொடங்கிய புகைகளோடு வானம் இருட்டத் தொடங்கிய புகைகளும் சேர்ந்துகொண்டது. அஞ்சலித்த மக்கள் புறப்படத் தயாரானபோது அங்கு வானமும் அழுது தீர்த்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com