தமிழினியும் சிவரதியும் அமைப்பில் இருக்கும்போதே புற்றுநோயாளிகள் தான் – அதிர்ச்சியை ஏற்படுத்தி தமிழ்க்கவியின் வாக்குமூலம்

Tamilkaviபடையினரால் கைது செய்யப்பட்டு புனா்வாழ்வளிக்கப்பட்ட  முன்னாள் பெண் பேராளிகள் எவரும் தடுப்பில்  துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளியான தமிழக்கவி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மற்றும் சிவரதி ஆகியோருக்கு இயகத்தில் இருக்கும் போதே புற்றுநோய் இருந்தது என்றும் அவா்கள் இயக்கத்திற்கு வெளியே வந்த பின்னா் புற்று நோய் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
புதன் கிழமை (17) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

இவரது இக்கருத்துக்கள் தமிழ் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு தமிழ்க்கவி யாருக்கோ விசுவாசமாகச் செயற்பட முனைவது அப்பட்டமாகத் தெரிகின்றது என்றும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்க்கவி மேலும் தெரிவிக்கையில்,

புனர்வாழ்வு முகாமுக்கு போனார்கள், அங்கு எதையோ கொடுத்தார்கள். அதனால் இறந்துவிட்டார்கள் என சொல்கின்றர்ர்கள்.

ஆனால் நாங்கள் இயக்கத்தில் சிவரதி என்றபிள்ளையை பாரிய வேலைகளுக்கு எடுப்பதே இல்லை. அவருக்கு இலகுவான வேலையேகொடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவர் ஏற்கனவே நோயாளிதான்.

எனக்கு தெரிய இறந்ததமிழினி, சிவரதி உட்பட மூன்று பெண் போராளிகளும் ஏற்கனவே நோயாளிகள்தான்.அவர்களுக்கு ஏற்கனவே புற்று நோய் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புனா்வாழ்வு முகாம்களிலிருந்து தாங்கள் இரண்டாயிரம் பெண் போராளிகள் வெளியில் வந்திருந்ததாகவும் முகாம்களில் பெண் போராளிகளை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலிஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். புனா்வாழ்வு முகாம்களிலிருந்து பூசாவுக்கு கொண்டுசெல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலீஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். பெண்களின் புனா்வாழ்வு முகாம்களுக்கு தனியே ஆண்கள் வர முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒழித்திருந்து பின்னர் யாராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இப்படி ஏதேனும் நடந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

புனா்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் பேராளிகளுக்கு எதிராக இவ்வாறு கூறுவது அவதூறு என்று தெரிவித்த அவர் அவர்களிற்கு எதிராக  சட்ட நடவடிக்கைக்கு செல்லப்போவதாகவும், மானநஸ்ட வழக்கு போடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுற்கு ஊடகங்கள் பெரும் தடையாக இருக்கிறது என்றுதெரிவித்த அவர் ஊடகங்கள் நினைத்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com