தமிழினியின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது

கடந்த 18.10.2015ம் திகதி சாவடைந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமியின் இறுதி கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (20) கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் இடம்பெற்றது. 

தமிழினியின் இறுதி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி கடந்த 18ம் திகதி மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை சாவடைந்ததார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds