சற்று முன்
Home / செய்திகள் / தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆதரவு..

தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆதரவு..

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் பெருந்தலைவர்களான தந்தை செல்வா, பெரியார் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகியோர் – தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். அந்த முயற்சியில் பெரும் வெற்றியும் கண்டது. துர்அதிர்ஸ்ட வசமாக அந்த ஒற்றுமை தற்போது சீர்குலைந்திருந்தாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிப்படைக் கொள்கைகளில் எதுவித மாற்றமும் இன்றி செயற்படுகிறது.

இன்று நாட்டு நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிற இந்நிலையிலேயே தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வை தூண்டுவதற்கு சில கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் நிகழ்வு நடத்தப்படுகிறது!

இதற்கு தமிழ் மக்கள் அனைவரும் பூரண ஆதரவை வழங்கி அதில் கலந்து கொள்ளுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகிறது!

இவ்வொற்றுமையின் அவசியத்தை நேற்று நடைபெற்ற சம்பவமும் எமக்கு உணர வைக்கிறது. கொக்கட்டிச்சோலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டவர்களை பொலிசார் கன்னியா வெந்நீர் ஊற்றில் நீராடவிடாத செயல் அரசினுடைய அனுசரணையுடனேயே நடந்திருக்கிறது என நான் சந்தேகப்படுகிறேன்.

எழுக தமிழ் மூலம் தமிழரின் ஒற்றுமை ஓங்கி வளரட்டும் என வாழ்த்துகின்றேன்

வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com