தமிழர் தாயகத்திலும், புலத்திலும், தமிழகத்திலும் மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற்றது

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும், தமிழகத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது.

இன்று மாலை 6.05 மணியளவில் மணிஒலி எழுப்பலுடன் ஆரம்பித்து, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து மாலை 6.07 மணியளவில் துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும், ஒழுங்குபடுத்தப்பட்ட இடங்களிலும், பொதுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரை ஏற்றியதையடுத்து, மாவீரர்களுக்காக நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் 3000 இற்கும் அதிகமான மாவீரர்களுக்கு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களும், மாவீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் முழங்காவில் துயிலுமில்லத்திலும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில், உடுத்துறை, சாட்டி துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை தீருவில் திடலிலும், கோப்பாய் துயிலுமில்லப்பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கோப்பாய் துயிலுமில்லத்தை இராணுவம் கைப்பற்றி தளம் அமைத்துள்ளதால் கோப்பாய் துயிலுமில்ல முன்றலில் நிகழ்வுகள் நடைபெற்றது. எனினும் இராணுவம் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கடும் நெருக்கடி விளைவிக்கப்பட்டது.

முல்லைத்தீவில், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, அலம்பில், வன்னிவிளாங்குளம் துயிலுமில்லங்களில் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலுமில்லம் அருகிலும் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, கண்டலடி, துயிலுமில்லங்களிலும் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் பங்கேற்றனர். புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கோப்பாய்

 முள்ளிவாய்க்கால்

கனகபுரம்

 

வாகரை (கண்டலடி)

சாட்டி

கஞ்சிக்குடிச்சாறு

உடுத்துறை

வல்வெட்டித்துறை

ஆலங்குளம்

மன்னார்

முள்ளியவளை

இராமேஸ்வரம் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com