தமிழருக்கு எதிரான “முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு” விழாவில் பிரதம அதிதியாக இரா.சம்பந்தன் பங்கேற்பு

sampanthan-mpஇரவோடு இரவாக யாழ்ப்பாணத்தில்  இருந்து ஐந்து இலட்சம் தமிழ்  மக்கள் 1995 ஆம் ஆண்டு இலங்கை அரச படைகளால்  வெளியேற்றிய நினைவுநாளான ஒக்ரோபர் 30 ஆம் திகதியன்று கொழும்பில் தமிழருக்கு எதிராக முஸ்லீம் அமைப்புக்கள் சிலவற்றால் “முஸ்லீம் இனச் சுத்திகரிப்பு நினைவுநாள்” “கருப்பு ஒக்ரோபர்” எனும் பெயரில் நடாத்தப்படும் விழாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியல் தீர்வு விடையத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு ஒருபோதும் ஒத்துளைக்கமாட்டோம் என முல்லீம் அரசியற் கட்சிகள் கூறிவரும் நிலையில் தமிழர்களால் முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் எனக் கூறும் விழா ஒன்றிற்கு தமிழ் மக்களின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் இரா. சம்ந்தன் கலந்துகொள்வது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அரச படைகளால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் 21 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் கூட ஒரு நினைவுநாள் அறிக்கை வெளியிட தயாரற்ற இரா.சம்பந்தன் இவ்வாறு தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்மம் மிகு சொற்பிரயோகங்களுடன் கூடிய விழா ஒன்றின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கிழக்கு மாகணாத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் முஸ்லீம் ஒருவரை முதலமைச்சராகக்கொண்டு வடக்கு கிழக்கை இணைக்கப்போவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com