சற்று முன்
Home / செய்திகள் / தமிழரசுக் கட்சியிலிருந்து முற்றாக வெளியேறுகிறேன் – அனந்தி அறிவித்தார்

தமிழரசுக் கட்சியிலிருந்து முற்றாக வெளியேறுகிறேன் – அனந்தி அறிவித்தார்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் கட்சித் தலமைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் தமிழரசுக் கட்சி பென் உறுப்பினரான அனந்தி சசிதரன் கட்சியின் உள் முரண்பாடுகள் தொடர்பாக கூட்ணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும் கட்சியில் தொடர்ந்தும் அங்கத்துவத்தைப் பெறவே விரும்பியிருந்தார்.

இவ்வாறு கட்சியில் தொடர விரும்பியமையானது கட்சியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது மாகாண சபை உறுப்பினர் பதவியும் வெற்றும் வெறுதாகும் நிலமை ஏற்படும் என்பதனால் அமைச்சராக தொடரும் விருப்பம்கொண்டு கட்சியில் முரண்பாட்டிற்கு மத்தியிலும் அங்கம் வகித்தார். இதேநேரம் வடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் எதிர்வரும் 24ம் திகதி நல்ளிரவுடன் நிறைவு பெறும் நிலையில் குறித்த பதவி விலகலை சமர்ப்பித்துள்ளார்.

இதேநேரம் புதிய கட்சிக்கான அறிவித்தலை இன்றைய தினம் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள நிலையில் 19ம் திகதியிடப்பட்ட கடித்த்தினை கட்சியின் தலமைக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு கடந்த 19ம் திகதி முதல் அனந்தி கட்சியில் இருந்து தானாகவே விலகியமையினால் குறித்த திகதியுடனேயே அவரது மாகாண சபை உறுப்பினர் பதவியும் வெறிதாகுமா ? என்ற கேள்வியும் அதற்கு பின்பு பயன்படுத்தும் மாகாண சபைச் சொத்துக்களிற்கு யார் பொறுப்பாளி என்ற கேள்வியும் எழுந்து நிற்கின்றது.

விஜயதசமி தினத்தன்று அனைவரும் நற்காரியங்களை ஆரம்பித்துக்கொள்வது வழமை அந்த நிலையில் 19ஆம் திகதி விஜயதசமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com