தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் கைது

sivakran69eeஇலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் புதியவன் வார இதழின் ஆசிரியருமான வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை மதியம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் துண்டு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
குறித்த துண்டில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வி.எஸ்.சிவகரன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள போதும் கைதிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை முன்னாள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை புலனாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் என்றழைக்கப்படும் அறிவழகன் திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலையில் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com