சற்று முன்
Home / செய்திகள் / தமிழரசுக் கட்சித் தலைமையை என்னிடம் தாருங்கள் – சிறிதரனுக்கு வந்த ஆசை

தமிழரசுக் கட்சித் தலைமையை என்னிடம் தாருங்கள் – சிறிதரனுக்கு வந்த ஆசை

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள தான் தயாராக உள்ளேன் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்குத் தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை.

தமிழரசுக் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் எனக் கூறுவது பொருத்தமற்றது.

தமிழரசுக் கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

அனைத்து உறுப்பினர்களும்,மக்களும் இணைந்து ஒருமித்துக் கோரினால் அந்தத் தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன். அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி, இன்னொருவரது பதவியைப் பறித்து அதில் அமர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்றார்.

இதனிடையே நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்த ஆபிரகாம் சுமந்திரன்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழரசுடைய தலைவர் தோற்றிருக்கிறார். பொதுச் செயலாளர் மட்டங்களப்பிலே தோற்றிருக்கிறார்.

ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே இருக்கிற பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தலைமை தோற்றதாகக் கருதலாம். அவர்கள் ஒரு சில வாக்குகளாலே தோற்கவில்லை.

அவர்கள் தீர்மானமாக தோற்றிருக்கிறார்கள். ஆகவே அதைக் குறித்தும் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டிருந்த நிலையிலேயே சிறிதரனின் இக் கருத்து இன்று வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com