தமிழரசின் மும்முனைப் போட்டி சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய தமிழரசு மாகாணசபை உறுப்பினர் !!

யாழ் மாநகரசபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருவரைப் பிரேரித்தால் ஈபிடிபியும் ஒருவரைப் பிரேரிப்பது எனவும் அதனடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மூன்றாம் இடத்துக்கு ஓரங்கட்டி பின்னர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து ஆர்னோட்டை முதல்வராக்குவது எனவும் திட்டம் வகுக்கப்பட்டிருந்த தகவல் அம்பலமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிரங்கப்படுத்தியிருந்த குறித்த இரகசியத் திட்டத்தினை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது இரகசியத் திட்டம் பெருமைக்குரியது எனக் கருதி பகிர்ந்ததன் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில நாட்களாக சுமந்திரனுக்கும் – ஈபிடிபி றெமீடியசுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், ரெலோ தலைவர்களுக்கும் ஈபிடிபி தலைவர்களுக்கும் என பலசுற்றுக்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்ததும் ஊடகங்கள் அவற்றினை அம்பலப்படுத்திவந்ததும் தெரிந்ததே.

இந்நிலையிலேயே யாழ் மாநகரசபையில் முதலர்வர் வேட்பாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருவரைப் பிரேரித்தால் ஈபிடிபியும் பிரேரிப்பது எனவும் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மூன்றாம் இடத்துக்கு ஓரங்கட்டி பின்னர் ஈபிடிபி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து ஆர்னோட்டை முதல்வராக்குவது எனவும் திட்டம் வகுக்கப்பட்டிருந்த தகவல் அம்பலமாகியுள்ளது.

 

அதன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்களில் இருவரும் இணைந்து முதல் சுற்று வாக்கெடுப்பில் ஈபிபிடிக்கு வாக்களிப்பது என திட்டம் தீட்டப்பட்டது. இதனால் 10 உறுப்பினர்களைக் கொண்ட ஈபிடிக்கு ஏனைய தென்னிலங்கைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்து 14 உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மூன்றாமிடத்துக்குப் பின்தள்ள திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

எனினும் திட்டமிட்டவாறு ஈபிடிப்பிக்கு வாக்களிக்க பணிக்கப்பட்ட இரு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் ஒருவர் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தார். இதனால் ஈபிடிபிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் 13 இற்கு 13 என வாக்குகள் கிடைத்தது. பின்னர் திருவிளச் சீட்டு மூலம் மணிவண்ணன் போட்டியிலிருந்து அகற்றப்பட்டார்.

இதனையடுத்து சபையில் வழங்கப்பட்ட 10 நிமிட இடைவேளையில் மாறி வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லீம் உறுப்பினரை அழைத்த மற்றொரு ஐக்கியதேசியக் கட்சியின் உறுப்பினர் உன்னால் எல்லாம் பறிபோகப் பார்த்தது என திட்டியதை ஊடகவியலாளர் கலரியில் இருந்த ஊடகவியலாளர்களால் கேட்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com