சற்று முன்
Home / செய்திகள் / தமிழரசின் தன்னிச்சை முடிவுகளுக்கு ரெலோ வைத்தது செக் – தமது 5 நிபந்தனைகளையும் ஏற்காவிட்டால் ரணிலுக்கு ஆதரவில்லை என அறிவிப்பு

தமிழரசின் தன்னிச்சை முடிவுகளுக்கு ரெலோ வைத்தது செக் – தமது 5 நிபந்தனைகளையும் ஏற்காவிட்டால் ரணிலுக்கு ஆதரவில்லை என அறிவிப்பு

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்க தவறுமாக இருந்தால் ரெலோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருவரும் ஐக்கியதேசிய முன்னணிக்கு ஆதரவாக செயற்படமாட்டாா்கள். என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ரெலோ அமைப்பின் மைத்தியகுழு உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா்.

இன்று (05) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திாிகையாளா் சந்திப்பிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறியுள்ளதாவது.

ரெலோவின் அறுதியும் இறுதியுமான இம் முடிவினை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடம் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வைத்து நேரடியாகவே கூறப்பட்டுவிட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தனின் அலுவலகத்தில் கூட்டப்பட்டது. இரண்டரை மணித்தியாலங்களாக இக் கூட்டம் நடைபெற்றது.

எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஜக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்று ரெலோ அமைப்பின் கோரிக்கையினை அடுத்துத்தான் இக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

இதுவரை காலம் இருந்த அரசுகள் ஆறு கடக்கும் முன் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின் நீ யாரோ நான் யாரோ என்று நிலையில்தான் இருந்தது. இதுவரை காலமும் தமிழ் தலைவர்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றுப்பட்ட போது மக்கள் அவர்களை அரவணைத்தார்கள்.

ஆனால் தற்போது உள்ள அரசியல் நெருக்கடி நிலையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க தவறி ஆட்சி அமைக்கப்போகும் அரசாங்கத்தினால் ஏமாற்றப்படுவோமாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்கள் எங்களை அரவணைக்க மாட்டார்கள்.

மாறாக தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது கோபம் கொள்வார்கள் என்ற கருத்துப்பட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ரெலோ அமைப்பினால் கூறப்பட்டது.

நல்லாட்சி அரசு இரண்டு பெரிய சிங்கள கட்சிகள் கொண்டு அமைக்கப்பட்டது.

இந்த அரசு தமிழ் மக்களுடைய ஒரு சில பிரச்சினைகளை பகுதியளவில் தீர்த்துள்ளார்கள். ஆனாலும் முக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்கவில்லை.

இந்த நிலையில்தான் ரெலோ அமைப்பினால் 5 அம்சக் கோரிக்கைகளை ஆதரவு வழங்கும் தரப்பினருக்கு நிபந்தனையாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

குறிப்பாக

01) மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கபடப வேண்டும்,

02) சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்,

03) முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுடைய காணிகள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்,

04) பாயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக வாபஸ்பெறப்பட வேண்டும்,

05) வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிக அடிப்படையிலாவது உடனடியாக இணைக்கப்பட வேண்டும்

என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் ரெலோ அமைப்பினால் முன்மொழியப்பட்டது.

இக் கோரிக்கைகள் ஊடாக மாகாண சபைகளுக்குள் மக்களை கூட்டமைப்பு முடக்கப் போகின்றது என்பது அர்தமல்ல.

இது ஒரு ஆரம்பம். ஏம்மமை நாமே ஆளுகின்ற சுயாட்சி தீர்வை நோக்கித்தான் கூட்டமைப்பு நகரும்.

இன்றைய சூழலில் கூட்டமைப்பு ஒரு பக்கம் சாய்ந்து மற்றைய தரப்பினை பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்று சிந்திக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. போர் குற்ற விடயங்களில் சமரசத்திற்கு எப்போதும் இடமில்லை.

ஆகவே எழுத்து மூலமான ஒப்பந்தங்கள் இல்லாமல் ஜக்கிய தேசிய முன்னணியை நம்கக் கூடாது என்பதை கூட்டமைப்பின் தாமைக்கு வர்புறுத்தி உரைத்திருந்தோம். தற்போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்றும் எமது சார்பில் கூறப்பட்டது.

ஒப்பந்தங்கள் செய்தால் பாதகமான நிலையை கொண்டுவரும் என்று இரா.சம்மந்தன் கூறினார். ஆனாலும் எங்களுயைட கருத்துக்களையும் அவர் ஏற்றுக் கொண்டதாக எங்களால் அறிந்து கொள்ளக் கூடாதாக உள்ளது.

இரா.சம்மந்தன் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட எந்த கருத்தினை ஏற்றுக் கொண்டார், எந்த கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவது முறையல்ல.

ஆனால் ஆதரவு வழங்கும் விடையத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைள் அல்லது நிபந்தனைகளில் ரெலோ அமைப்பிற்கு திருப்தி இல்லை என்றால் எமது இரு எம்.பிக்களும் ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் என்பதையும் இரா.சம்மந்தனுக்கு தெளிவாக தெரிவித்துவிட்டோம்.

இருப்பினும் நேற்றைய கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாவிட்டாலும், சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com