சற்று முன்
Home / செய்திகள் / தமிழரசின் உட்கட்சி மோதல் – பறிபோனது உறுப்பினர் பிரகாசின் பதவி

தமிழரசின் உட்கட்சி மோதல் – பறிபோனது உறுப்பினர் பிரகாசின் பதவி

யாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின்உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­தால் அர­சி­தழ் அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சார்­பில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று தி.பிர­காஸ், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வா­கி­யி­ருந்­தார். சபை­யின் தவி­சா­ளர் தெரி­வில், அவர் கட்சி முடி­வு­களை மீறிச் செயற்­பட்­டார் என்று தெரி­வித்து அவ­ரைக் கட்சி உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கி­ய­து­டன், அவ­ரது சபை உறுப்­பி­னர் பத­வியை வெறி­தாக்க வேண்­டும் என்று தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தது.

தன்னை உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கி­யமை தவறு என்று தி.பிர­காஸ் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். அந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

வழக்கை மீளப் பெறு­வ­தாக முறைப்­பாட்­டா­ளர் பிர­காஸ் மன்­றில் தெரி­வித்­தை­ய­டுத்து வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

இந்த நிலை­யில் வலி­கா­மம் தெற்­குப் பிர­தேச சபை­யின் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் த.அகி­லன், தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சி­தழ் அறி­விப்­பைச் செய்­துள்­ளார். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி அந்த வெற்­றி­டத்­துக்­குப் புதிய உறுப்­பி­னரை நிய­ம­னம் செய்­ய­வேண்­டும்.

About Jaseek

One comment

  1. I like the efforts you have put in this, thanks
    for all the great posts. https://supermemoryformula.net/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com