சற்று முன்
Home / செய்திகள் / தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்திகள் கவலையளிக்கிறன – வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்திகள் கவலையளிக்கிறன – வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

jaya-wigneswaran-300x225தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்திகள் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்ச் சி.வி.விக்கினேஸ்வரன் அவர் சுகமடைந்து அரசியல் வானில் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவதாக தெரிவித்துள்ளர்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அவர் தெரிவித்ததாவது,

தமிழக முதலமைச்சர் கௌரவ செல்வி ஜெயலலிதா அவர்களின் உடல்நிலைபற்றிய முரணான செய்திகள் எமக்கு கவலையளிக்கின்றன. எனினும் அவர் விரைவில் சுகமடைய வேண்டும் என்ற வடமாகாண தமிழ் உள்ளங்களின் பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இலங்கை வடமாகாண தமிழ் மக்களின் மனம்கவர்ந்த தலைவியார் செல்வி ஜெயலலிதா அவர்கள் எமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவர்.

அவர் சொல்லவேண்டிதை பயப்படாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறும் இயல்புடையவர். அவர் சுகமடைந்து அரசியல் வானில் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றோம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண முதலமைச்சர்
இலங்கை

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com