சற்று முன்
Home / இந்தியா / தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு – அப்போலோ மருத்துவமனை அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு – அப்போலோ மருத்துவமனை அறிக்கை

JayaVanakamlongதமிழக முதல்வர்  ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் – 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பல்வேறு கட்ட தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி விட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘திடீர்’ உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக முதலில் தகவல்க ள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து தற்போது அப்போல்லோ மருத்துமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்வர் ஜெயலலதாவுக்கு  இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்ப்பட்டது., அதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு தற்போது இதயவியல் மற்றும் சுவாசவியல் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com