சற்று முன்
Home / செய்திகள் / தமிழக முகாமிலிருந்து நாடுதிரும்பிய 06 பேர் மன்னார் கடற்பரப்பில் கைது

தமிழக முகாமிலிருந்து நாடுதிரும்பிய 06 பேர் மன்னார் கடற்பரப்பில் கைது

தமிழகம் அகதி முகாமில் இருந்து மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்றைய தினம் படகு வழியாக தாயகம் திரும்பிய நிலையில் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்..

மன்னாரில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகமிமுகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள இடையூறுகள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் அவர்களின் கோரிக்கை இதுவரை நிரைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றைய தினமும் ஓர் படகில் இரு சிறுவர்கள் , ஓர் பெண் உட்பட ஆறுபேர் பயணித்துள்ளனர். நிலையில் இவர்களுடன் இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறுபேர் மட்டுமே தாயகம் திரும்பிய அகதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் தலை மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட அனைவரும் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இம் மாதத்தில் இதுவரை 19 பேர் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தாயகம் திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com