தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட 29 பேருக்கு பதவி!

jayalalithaa02தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை பட்டியல்

01. முதலமைச்சர் – ஜெயலலிதா – பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை
02. நிதி அமைச்சர் – ஓ.பன்னீர்செல்வம்
03. வனத்துறை – திண்டுக்கல் சீனிவாசன்
04. எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணித்துறை
05. செல்லூர் ராஜூ – தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை

06. தங்கமணி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை
07. வேலுமணி – உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்
08. ஜெயக்குமார் – மீன் வளத்துறை,
09. சி.வி. சண்முகம் – சட்டத் துறை
10. கே.பி.அன்பழகன் – உயர் கல்வித் துறை
11. வி.சரோஜா-  சமூக நலத்துறை மற்றும் சத்துணவு
12. கே.வி. கருப்பண்ணன் –  சுற்றுச்சூழல் துறை
13. ஆர்.காமராஜ் – உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை
14. எம்.சி.சம்பத் – தொழில்துறை
15. ஓ.எஸ். மணியன் – ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
16. உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
17. விஜயபாஸ்கர் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
18. எஸ்.பி.சண்முகநாதன் – பால்வளத்துறை
19. கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை
20. ராஜேந்திர பாலாஜி – ஊரகத் தொழில் துறை
21. வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத்துறை
22. பெஞ்சமின் – பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை
23. எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை
24. உதயகுமார் – வருவாய் துறை
25. மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்
26. ராஜலட்சுமி – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
27. எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்
28. துரைக்கண்ணு – வேளாண்  மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
29. கே.சி. வீரமணி – வணிக வரித்துறை

14 புதிய முகங்கள்

அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளவர்களில் திருச்சி வளர்மதி, ராசிபுரம் டாக்டர் சரோஜா, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 14 பேர் புதியவர்கள்.

முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று (20-ம் தேதி) நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (21-ம் தேதி) சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com