சற்று முன்
Home / செய்திகள் / தமிழகம்வரை கிடைக்கும் இலங்கை தொலைபேசி சிக்னல்களால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் !!

தமிழகம்வரை கிடைக்கும் இலங்கை தொலைபேசி சிக்னல்களால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் !!

இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்கள் கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளது.மேலும் இச்சம்பவம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு  கேள்விகுறியாக அமைவதால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரிடம் தெரிவிக்கவுள்ளேன் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின.

இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்போன் நிறுவனங்கள் பல இலங்கையில் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது இலங்கையிலுள்ள தலைமன்னார் துறைமுகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களின் செல்போன் சேவை 30 கி.மீ. தூரம் வரை துல்லியமாக கிடைக்கிறது. இதனால் கடத்தல்காரர்களுக்கு இவை பெரும் உதவியாக உள்ளதாம்.

கச்சத்தீவு, இந்திய – இலங்கை மணற்தீடைகள் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் இலங்கை செல்போன் நிறுவனங்களின் சேவை எட்டுவதால் கடத்தல் கும்பல்கள் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தை அறிந்து கொண்டு படையினரிடம் இருந்து டிமிக்கி கொடுத்து விட்டு எளிதாக தப்பி விடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (12) இராமேஸ்வரம் வந்திருந்த தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்: இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்கள் கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளது.மேலும் இச்சம்பவம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு  கேள்விகுறியாக அமைவதால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரிடம் தெரிவிக்கவுள்ளேன் என அவர்  தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com