சற்று முன்
Home / இந்தியா / தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 4 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்தவகையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 721ஆகப் பதிவாகியுள்ளள்ளது.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2 ஆயிரத்து 82 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்குமட்டும் மொத்த பாதிப்பு 64 ஆயிரத்து 689 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் 64 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களில் குணமடைந்து இன்று 2 ஆயிரத்து 357 பேர் வீடுகளுக்கத் திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக இதுவரை 58 ஆயிரத்து 378 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பதவியேற்க முன்பே மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

நாளை முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com