தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? வாக்குச்சாவடி கருத்துக்கணிப்பு -திடுக்கிடும் முடிவுகள்!

p2தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட  வாக்குப்பதிவுக்கு பிந்தைய ( Exit poll ) கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

அதன்படி இந்தியா ருடே மற்றும் நியூஸ் நசனல் ரீவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.கவே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரைம் நவ் தெலைக்காட்சியின் கருத்துக்கணிப்பில் அதிமுக 139, திமுக 78, மற்ற கட்சிகள் 17 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ருடே – India Today-Axis My India

அதிமுக 89 முதல் 101, திமுக 124 முதல் 140 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 0-3, மற்ற கட்சிகள் 4 – 8 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் நசனல் ரீவி  -NewsNationTV

அதிமுக 35 சதவீத வாக்குகளுடன் 95 முதல் 99 இடங்களை கைப்பற்றும் என்றும், திமுக 39 சதவீத வாக்குகளுடன் 114 முதல் 118 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நலக்கூட்டணி 14, பா.ஜனதா 4, இதர கட்சிகள் 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரைம் நவ்- Times Now TV

அதிமுக 139, திமுக 78, மற்ற கட்சிகள் 17 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 232 தொகுதிகளிலும் ( 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.) இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் தமிழகம் முழுவதும் 69.19% வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com