தமிழகத்திலிருந்து பட்டதாரிகள் இறக்குமதி

மலை­ய­கத்­தில் கணித விஞ்­ஞான பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்­குக் கடும் பற்­றாக்­குறை நில­வு­கி­றது. வடக்­கு-­கி­ழக்­கி­லி­ருந்­தும் உரிய ஆசி­ரி­யர்­க­ளைப் பெற­மு­டி­ய­வில்லை. பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய வேறு­வ­ழி­யின்­றித் தமிழ் நாட்­டி­லி­ருந்து கணித, விஞ்­ஞான ஆசி­ரி­யர்­களை அழைத்து வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­தார். மலை­ய­கம் மீபே­யில் அமைந்­துள்ள கல்வி அமைச்­சின் தேசிய கல்வி நிறு­வ­னத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்ற பெருந்­தோட்­டப் பாட­சா­லை­கள் சம்­பந்­த­மான கலந்­து­ரை­யா­ட­லின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அமைச்­சர் மேலும் தெரி­வித்­தா­வது:

இந்­தப் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய எடுக்­கப்­பட்ட பல முயற்­சி­க­ளுக்­கும் பல முட்­டுக்­கட்­டை­கள்­தான் ஏற்­பட்­டன. எங்­க­ளி­ட­மும் கணித, விஞ்­ஞான பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­கள் இல்லை. இதற்கு ஒரு தீர்­வாக இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டில் இருந்து ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்­குத் தற்­பொ­ழுது இந்­தி­யத் தூத­ர­கம் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

தற்­பொ­ழுது மலை­ய­கத்­தில் 25 கணித, விஞ்­ஞா­னப் பாட­சா­லை­க­ளை­யும் 35 பாட­சா­லை­க­ளை­யும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதற்­கான நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. எங்­க­ளுக்கு வளங்­க­ளைப் பெற்­றுக் கொடுக்க முடி­யும்.

குறிப்­பா­கப் பாட­சா­லை­க­ளின் கட்­டட வசதி, மல­ச­ல­கூட வச­தி­கள், நீர் வச­தி­கள், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான பயிற்­சி­கள் போன்ற விட­யங்­க­ளைப் பூர்த்தி செய்ய முடி­யும்.ஆனால் கணித, விஞ்­ஞா­னப் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளின் குறை­பா­டு­க­ளைத் தீர்ப்­ப­தற்கு நாம் பல முயற்­சி­களை மேற்­கொண்­ட­போ­தும் அது எது­வும் நிறைவு செய்ய முடி­ய­வில்லை.

வடக்­கு-­கி­ழக்­கில் இருந்து ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­ட­போ­தும் அது முடி­யா­மல் போய்­விட்­டது. ஒய்­வு­பெற்ற ஆசி­ரி­யர்­களை நிய­மிக்க ஏற்­பாடு செய்­த­போது அது­வும் முடி­யா­மல் போய்­விட்­டது. என­வே­தான் இறு­தி­யாக இந்­தி­யத் தூத­ர­கத்­து­டன் கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்­தி­னேன். என்­னு­டைய கோரிக்­கையை அதா­வது இந்­தி­யா­வின் தமிழ்­நாட்­டில் இருந்து கணித, விஞ்­ஞான பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளைப் பெற்­றுத் தர வேண்­டும் என்று அவர்­க­ளி­டம் கேட்­டுக் கொண்­ட­தற்கு இணங்க அத­னைச் செய்ய முடி­யும் என்று தூத­ர­கத்­தி­னர் என்­னி­டம் கூறி­னார்­கள்.

இந்த விட­யம் தொடர்­பாக முறை­யாக மனு ஒன்­றைப் பெற்­றுத் தரு­மாறு கேட்­டுக் கொண்­டார்­கள். நாம் இந்த மனு­வைத் தயா­ரித்து வரு­கின்­றோம். மிக விரை­வில் அதனை இந்­தி­யத் தூத­ரி­டம் கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளேன்.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து ஆசி­ரி­யர்­களை பெற்­றா­வது இந்­தப் பிரச்­சி­னை­ககு தீர்வு காண­வேண்­டும். நாம் இதனை பேசிக் கொண்டு இருப்­ப­தால் எந்­த­வி­த­மான பய­னும் இல்லை. இந்­திய ஆசி­ரி­யர்­க­ளின் வுரு­கை­யின் மூல­மாக எமது 25 பாட­சா­லை­க­ளை­யும் அபி­வி­ருத்தி செய்ய முடி­யும் என்று எதிர்­பார்க்­கி­றேன்-­என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com