தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவளிக்க முடியாது – இலங்கை மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம்

 

SAMSUNG CAMERA PICTURES

இலங்கை மருத்துவ சங்கத்தில் அனுமதி பெறாத தனியார் மருத்துவக் கல்லூரியான மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மருத்துவபீட மாணவர்களை அரசு தாக்கி அவர்களை அடக்க முயல்வதனைக் வன்மமையாகக் கணடிப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மருததுவ உத்தியோகத்தர் சங்கத்தின் வட பிராந்தியத்தினர் இவ்வாறான தரம்குறைந்த தனியார் மருத்துவக் கல்லூரிகைளை அனுமதிப்பது நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஆபத்தானது எனவும் எச்சரித்துள்ளனர்.

வட மாகணத்திலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின்   ஏற்பாட்டில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகின்சூழலில் தாம் தனியார் மருத்துவத் துறையின் வரவை எதிர்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர்கள் இலங்கை மருத்துவ சங்கத்தில் அனுமதி பெற்ற மருததுவக் கல்லூரியாக இயங்குவதோடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரீட்சைகளின் நியமம் பல்கலைக்கழக நியமனங்களுக்கு உட்பட்டவகையில் மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்a வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த தனியார் மருத்துவக் கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞான கற்கையைக் கற்காத மாணவர்ளகளும், ஒரு பாடத்தில் மாத்திரம் சாதாரண சித்தி எய்திய மணவர்களும் பணத்தினைச் செலுத்தி  கல்விகற்றுவருவதாகவும் இவ்வாறக பெருந்தொகைப் பணத்தினை பெருமளவான மாணவர்கள் இங்கு கல்விகற்க செலுத்திவருவதாகவும் தெரிவித்ததோடு குறித்த மருத்துவக் கல்லூரியில் ஏழு அணிகளைச் சேர்ந்த சுமார் 1000 வரையான மணவர்கள் கல்விகற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறன மாணவர்களை தாம் மருத்துவ மனைகளிவ் ஏற்கப்போவதில்லை எனத் தெரிவித்த அவர்களிடம் வெளிநாட்டில் கல்வி கற்றுவரும் மாணவர்களை மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்கின்றனவே எனக் கேட்டபோது,

ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்றுவரும் மருத்துவர்கள் இலங்கை அரசின் நியமங்களிற்கு உட்பட்டு பரீட்சை எழுதி சித்தியடைந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர் எனவும் அப்பரீட்சைகள் கூட கடுமையானது எனவும் தெரிவித்த அவர்கள் வெளிநாடுகளில் கற்றுவரும் மாணவர்களில் சுமார் 10 வீதத்தினரே குறித்த பரீட்சைகளில் சித்தியடைவதாகவும் தெரிவித்தனர்.

 

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com