சற்று முன்
Home / செய்திகள் / தனது தந்தை தமி­ழர் என்­பது குறித்து பெரு­மைப்­ப­டு­கிறாராம் – குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­கள விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த டி சில்வா

தனது தந்தை தமி­ழர் என்­பது குறித்து பெரு­மைப்­ப­டு­கிறாராம் – குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­கள விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த டி சில்வா

எனது தந்தை தமி­ழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்­றேன் இவ்வாறு குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­கள விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த டி சில்வா தெரி­வித்­துள்­ளார்.

மகிந்த அணி­யைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிர­சன்ன (பாது­காப்­புத் தரப்­பி­னர் தொடர்­பான வழக்­கு­க­ளில் பாது­காப்­புத் தரப்­பி­ன­ருக்கு ஆத­ர­வாக முன்­னி­லை­யா­கு­ப­வர்) தனது கீச்­ச­கத்­தில், பொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த டி சில்­வா­வின் பிறப்­புச் சான்­றி­தழ் பிர­தியை பதி­விட்­டி­ருந்­தார்.

நிசாந்த சில்­வா­வின் தந்தை தமி­ழர் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்­தார். இது தொடர்­பில் நிசாந்த டி சில்வா, லங்கா நீயூஸ் வெப் ஊட­கத்­துக்கு கருத்­துத் தெரி­விக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

‘எனது தந்தை, எனது தாத்தா என்று எனது பரம்­ப­ரையே இந்த நாட்­டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளா­கும். அவர்­கள் அனை­வர் தொடர்­பி­லும் நான் பெரு­மைப்­ப­டு­கின்­றேன். நான் மனி­தத் தன்­மையை மதிக்­கி­றேனே தவிர நபர் ஒரு­வ­ரின் இனத்­துக்கு அல்ல. எனது கட­மை­யின் போது கட்சி, நிறம், இனம், மதம் பேதங்­கள் இல்லை. அனை­வ­ரும் மனி­தர்­கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே நான் சேவை செய்­கின்­றேன். எனது பிறப்பு சான்­றி­த­ழில் எனக்கு சிங்­க­ள­வர் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நான் மனித இனத்­துக்கே உரி­மை­யா­கின்­றேன். சிங்­க­ளம், தமிழ் முஸ்­லி­மாக இருப்­ப­தற்கு முன்­னர் அனை­வ­ரும் மனி­த­னாக இருப்­போம். நான் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் மன­சாட்­சிக்கு உண்­மை­யா­க­வும், நாட்­டின் சட்­டத்­திற்­க­மை­ய­வும் செயற்­ப­டு­கி­றேன். இனி­மே­லும் அப்­படி தான் செயற்­ப­டு­வேன். எனது கடமை தொடர்­பில் பலர் கோப­ம­டை­கின்­றார்­கள். அது குறித்து நான் அதிர்ச்­சி­ய­டை­வ­தில்லை’ என்று நிசாந்த சில்வா குறிப்­பிட்­டுள்­ளார்.

தமிழ் மாண­வர்­கள் கடத்­தப்­பட்ட வழக்கு, லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை வழக்கு என்று மிக முக்­கி­ய­மான வழக்­கு­க­ளில் விசா­ரணை அதி­கா­ரி­யா­கச் செயற்­ப­டு­ப­வர் நிசாந்த சில்வா.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா கொலை வழக்­கி­லும் விசா­ரணை அதி­கா­ரி­யா­கச் செயற்­பட்­டி­ருந்­தார். கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர், மேற்­கு­திற்த வழக்கு விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து அவரை நீக்­கும் முயற்சி எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. பல தரப்­புக்­க­ளின் எதிர்ப்­பை­ய­டுத்து அது கைவி­டப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com