சற்று முன்
Home / செய்திகள் / தந்தையின் வாகனத்தில் மோதி 5 வயது மகள் பலி – வவுனியாவில் துயரம்

தந்தையின் வாகனத்தில் மோதி 5 வயது மகள் பலி – வவுனியாவில் துயரம்

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது,

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுதர்ஷன் என்பவர் நேற்றைய தினம்(09.05.2018) காலை தனது ஐந்து வயது மகளான ருஷா என்பவரை முன்பள்ளி பாடசாலைக்கு தனது கயஸ் ரக வாகனத்தில் ஏற்றி சென்று இறக்கிய பொழுது தனது வாகனத்தை முன்நோக்கி நகர்த்தியுள்ளார்.

அதன் பொழுது சிறுமி வாகனத்தின் முன்பக்கமாக கடப்பதை அவதானிக்காத தந்தை சிறுமி மீது வாகனத்தை மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி எதிர்வரும் 23.05.2018 அன்று தனது ஐந்தாவது பிறந்த தினத்தை கொண்டாட இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

—————————————————-

தயவு செய்து பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கோ தனியார் வகுப்பிற்கோ கொண்டு செல்கையில் அவதானமாக இருப்பதுடன் அவர்களை வகுப்பறை வரை அழைத்து சென்று விட்டு அழைத்து வாருங்கள்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com