தந்திரமாக கொள்ளையடித்த திருடர்களை கண்டுபிடித்த மோப்ப நாய்கள்…

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை ரொசல்ல பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் களவாடப்பட்ட 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பணம் ஆகியவற்றை களவாடி சென்றவர்களை புதிதாக அட்டன் பிரதேச பொலிஸ் பிரிவுக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட மோப்ப நாய்களின் உதவியோடு திருடர்கள் பிடிக்கப்பட்டதாக மோப்ப நாய் பிரிவின் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

01.10.2016 அன்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் ஆசிரியர் மற்றும் அவரின் மனைவி வீட்டை விட்டு வெளியில் சென்ற வேளையில் வீட்டில் உட்புகுந்த இனந்தெரியாதவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தந்திரமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டில் முதியோர் ஒருவர் மட்டும் இருந்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியர் 02.10.2016 அன்று காலை முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

முறைபாட்டை ஏற்ற பொலிஸார் மோப்ப நாய்களை ஸ்தலத்திற்கு கொண்டு விசாரணையை நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது அந்த மோப்ப நாய்கள் கள்வர்கலால் விட்டு செல்லப்பட்ட கை தொலைபேசியின் பின்புற மூடியை மோப்பம் எடுத்து பின் தொடர்ந்த மோப்ப நாய்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த கைதொலைபேசிக்கு சம்மந்தப்பட்ட நபர்களை தாவி பிடித்துள்ளது.

இதன் பின்னர் பொலிஸ் விசாரணை இவர்களின் மீது மேற்கொண்ட பொழுது உண்மையான திருட்டு சம்பவம் அம்பலமானது. அதன் பின் குறித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்படாத நிலையில், 70,000 ரூபாய் பணமும், ஒரு கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.dsc02348 dsc02362 vlcsnap-2016-10-02-18h30m09s74

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com