ததேகூ உறுப்பினர்கள் நாளை ஒன்றுகூடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (21) இடம்பெறவுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு கட்சிகளின் உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை விரைவாக கூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு திருத்த யோசனை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் குறித்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக, சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds