தண்னை வழங்கும் அதிகாரம் எமக்கு இல்லை – ஜனாதிபதிக்கு விதப்புரை செய்ய மட்டுமே முடியும்

ஜனாதிபதி ஆணைக்குழு நீதிமன்றம் இல்லை. அதனால் விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்க முடியாது. ஜனாதிபதிக்கு விதப்புரைகளே செய்ய முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பி. பரணகம தெரிவித்தார்.
காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவால் மக்ஸ்வெல் பி.பரணகம தலைமையில்  ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழு யாழில் நேற்று முதல் விசாரனைகளை நடாத்தி வருகின்றன நேற்றைய தினம் 165 பேர் சாட்சியம் அளித்து இருந்தனர்.
இரண்டவாது நாளான இன்றைய தினம் 266 பேர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 148 பேர் வருகை தந்து சாட்சியம் அளித்தனர். புதிதாக 50 பேர் பதிவுகளை மேற்கொண்டனர். அதில் 28 பேர் சாட்சியம் அளித்தனர்.
இன்றைய சாட்சி அமர்வுகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவுக்கும் போதே ஆணைக்குழுவின் தலைவர் பரணகம இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds