“தண்டனை வழங்கியதற்காக வருந்துகின்றேன்“ – வவனியா நீதிபதி

“தண்டனை அனுபவித்த ஒருவருக்கு மீண்டும் தண்டனை வழங்குவதற்காக வருந்துகின்றேன்” என்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மன்றில் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பு செய்தார் என்ற குற்றத்துக்கு மறுவாழ்வு பெற்ற முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தபோதே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ஏற்கனவே அரசின் மறுவாழ்வு வழங்கப்பட்ட நபருக்கு சட்டத்தின் அடிப்படையில் மீளவும் தண்டனை அனுபவிப்பது தொடர்பில் நான் வருந்துகின்றேன். சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு தண்டனை விதிக்க வேண்டும். அதனடிப்படையில் ஆயுள்காலச் சிறைத் தண்டனையை விதிக்கின்றேன்” என்று நீதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com