தடையை மீறி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், பாலமேடு, சிங்கம்புணரி போன்ற பல்வேறு பகுதிகளில் தடையை மீறி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமது கட்சியின் ஆதரவில் தமிழகத்தில் 12 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதாக நாம் தமிழர் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் நேற்று (சனிக்கிழமை) காலை ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கக்கோரி தடையை மீறி பேரணி நடத்தப்பட்டு இருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், இயக்குனர் கெளதமன் மீதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டித்திருந்தனர்.

இதனிடையே, பாலமேடு கிராமத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வண்ணம் ஏராளமான அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பாலமேட்டில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தங்கள் காளைகளை கூட்டத்திற்கு அவிழ்த்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
இதே போல், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com