சற்று முன்
Home / செய்திகள் / தங்காலையில் வெறியாட்டம் – துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி 5 பேர் படுகாயம்

தங்காலையில் வெறியாட்டம் – துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி 5 பேர் படுகாயம்

தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு – தப்பிச்சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ரி – 56 ரக துப்பாக்கியும், கைத்துப்பாக்கியும் பயன்படுத்திலே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நத்தார் பண்டிகையன்று இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தங்காலைப் பகுதியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். விசேட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com