டொரிங்டன் பகுதியில் பசும் பொன் வீடமைப்பு திட்டத்தில் 23 வீடுகள் கையளிப்பு

இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட அக்கரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் 23 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 14.02.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் அவரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் 23 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு “ஹசிஸ் புரம்” என பெயர் சூட்டி வீடுகளை அமைச்சர் திகாம்பரம் 14.02.2016 அன்று கையளித்தார்.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உட்பட பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறண்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com