”டொனால்ட் ரம்பு பிறசிடன்ட் ஆனா ரேக் இற் ஈசி பாலிசி“ – புதிய வரிகளுடன் பட்டையைக் கிழப்பும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்

……………………………….

கிளாரி கிளின்ரன் தோற்றுப்போனோ ரேக் இற் ஈசி பாலிசி

டொனால்ட் ரம்பு பிறசிடன்ட் ஆனா ரேக் இற் ஈசி பாலிசி

ஐந்நூறு ரூபா செல்லாப் போனா ரேக் இற் ஈசி பாலிசி

ஆயிரம் ரூபா செல்லாப் போனா ரேக் இற் ஈசி பாலிசி

ஊர்வசி ஊர்வசி ரேக் இற் ஈசி ஊர்வசி…………….

கடலின் நடுவிலே பற்றரி தீர்ந்தா ரேக் இற் ஈசி பாலிசி

ஹெல்மற் போட்டும் மாமா புடிச்சா ரேக் இற் ஈசி பாலிசி

கிழிந்த பான்டை பஷன்னு சொன்னா ரேக் இற் ஈசி பாலிசி

பெலுட்டைப் போட்டும் வேட்டி அவிழ்ந்தா ரேக் இற் ஈசி பாலிசி

……………………………….

பாடலைக் கேட்க இங்கு அழுத்தவும்

1990களின் ஆரம்பத்தில் கலக்கிய , ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல பாடலான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடலின் மாற்றி அமைக்கப்பட்ட வரிகளுடன் நவீன இசையில் எம் டிவி நிறுவனம் மீண்டும் வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.
அதில் தான் இசை அமைத்த பாடல் ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்ற பாடலில் வரும் சரணங்களை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற விரும்புவதாகவும், அந்த பாடல் வரிகளில் ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து தற்போது கூற வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
மேலும், தமிழ் பாடலில் வந்த அதே தொனியில் சுவாரஸ்மான அதே சமயம் நகைச்சுவையான சொற்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கோரிக்கையை தொடர்ந்து பல ரசிகர்கள் தங்களுடைய புதிய வரிகளை கமெண்ட் பகுதியில் தட்டிவிட்டனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஹ்மான் ரசிகர்கள் இதில் பங்கேற்றனர்.
குவிந்திருந்த மாற்று வரிகளிலிருந்து நான்கு பேரின் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தேர்ந்தெடுத்தார்.
பிரசாத் கிருஷ்ணா, அகிந்த்ய வட்லு, ராஜேஷ் ராஜாமணி மற்றும் திலீப் பாலாஜி ஆகிய நால்வரின் வரிகளும் புதிய டேக் இட் ஈஸி பாடலுக்காக தேர்வானது.
அதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் புதிய வரிகளை கொண்டும், புதிய இசை கருவிகளை கொண்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய பாடலை பாடியுள்ளார்.
முன்னர், ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து வரிகள் வேண்டாம் என்று கூறியிருந்த ரஹ்மான் பின்னரும் அதனை இந்த பாடலில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com