டெஸ்ட் தரவரிசை – முதலிடம் பிடித்தார் அஸ்வின்

ashwin-testடெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனே காரணம். இவர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்தநிலையில், டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 3-வது இடத்தில் இருந்த அஸ்வின், 900 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் 878 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஆன்டர்சன் 870 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், மற்றொரு இங்கிலாந்து வீரர் பிராட் 836 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இலங்கை வீரர் ஹெராத் 831 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் யாசீர் ஷா 806 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், இந்திய வீரர் ஜடேஜா 805 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஆஸ்திரேலியா வீரர் ஸ்டார்க் 792 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், நியூஸிலாந்து வீரர் வாக்னர் 731 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா வீரர் பிளென்டர் 723 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds