டெனீஸ்வரன் பதவி விலகாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்!

வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அமைச்சு பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைத்துவ குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) ரெலோ அமைப்பின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவிலுள்ள ரெலோ அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் டெனீஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

21தலைமைக்குழு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த அமைப்பின் 15 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டெனீஸ்வரன் மீது மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

டெனீஸ்வரன் பதவி விலகாவிட்டால், கட்சியிலிருந்து அவர் நீக்கப்படுவார் என ரெலோ அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com