டெனீஸ்வரன்மீது நடவடிக்கை எடுக்கவுள்ளார் முதலமைச்சர்!

வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன்மீது நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ரெலோ கட்சியின் தலைவர் சிறிகாந்தாவுக்கு உறுதியளித்துள்ளார்.

வடக்கு மாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழர் விடுதலைக் கழகம் (ரெலோ) கடந்த 13ஆம் நாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

அதில் ரெலோ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண அமைச்சில் அங்கம் வகிக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரனைப் பதவி நீக்கம் செய்வதுடன், அப்பதவிக்கு தங்களால் சிபாரிசு செய்யப்படும் நபரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

உங்­கள் கடி­தம் கிடைத்­தது. அதன் உள்­ள­டக்­கங்­கள் கவ­னத்­தில் எடுக்­கப்­பட்­டன. ஏற்­க­னவே அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் எமது விசா­ர­ணைக்­குழு முன் தான் தெரி­ப­ட­மாட்­டார் என்று பகி­ரங்­க­மா­கக் கூறி­யதை முன்­வைத்­தும் வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தீர்­மா­னித்­தி­ருந்­தேன். எனவே உங்­கள் பரிந்­து­ரை­க­ளும் கவ­னத்­தில் எடுக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வன என்­ப­தைத் தங்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­கின்­றேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com