சற்று முன்
Home / செய்திகள் / டெங்குப் பாதிப்பு – யாழ் மாணவிக்கு நோயாளர் காவு வண்டியில் பரீட்சை எழுதச் சென்றுவர ஏற்பாடு

டெங்குப் பாதிப்பு – யாழ் மாணவிக்கு நோயாளர் காவு வண்டியில் பரீட்சை எழுதச் சென்றுவர ஏற்பாடு

க.பொ.த சாதாரணப் பரீட்சை எழுதும் ஓர் மாணவி டெங்கு நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கம்பட்ட நிலையில் தினமும் நோயாளர் காவு வண்டியில் வந்து பரீட்சை எழுதி வைத்தியசாலை திரும்புகின்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த மாணவி நகரில் உள்ள ஓர் பிரபல பாடசாலை மாணவியாவார். இவ்வாறு டெங்கு நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை பரீட்சை எழுதுவதற்காக சென்று வருவதற்கு அனுமதியளித்துள்ள வைத்தியசாலை நிர்வாகம் தினமும் சென்று வருவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய வைத்தியசாலையில் இருந்து பரீட்சை மண்டபத்திற்கு சென்று வருவதற்காக தினமும் நோயாளர் காவு வண்டி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு மாணவியின் வைத்திய வசதிகளிலும் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com