டீசல் வாகன இறக்குமதி நிறுத்தம் ! டீசல் முச்சக்கரவண்டிகள் பங்களாதேசுக்கு விற்பனை !! – பாதீட்டு உரையில் மங்கள

டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்தி மின்சார முச்சக்கரவண்டிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இதன்பொருட்டு மின்னியல் முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு, டீசல் முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமதி வரிகள், 50,000 ரூபாயால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (09) 2018 ஆம் ஆண்டிற்கான பாதீட்டைச் சமர்ப்பிதது உரையாற்றிய அவர்,
“தற்போது பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தற்போதுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு, அவர்களுடைய முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு காலஅவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்களை இலங்கையில் ஊக்குவிக்கும் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாற்றீடாக மின்சார சார்ஜ்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com