டிசம்பர் 31 இற்குப் பின் சேதமாக்கிய நாணயத்தாள் செல்லாது – உடன் வங்கியில் மாற்றுங்கள்

சேதமாக்கப்பட்ட பண நோட்டுகளை உடனடியாக வங்கிகளில் மாற்றி வேறுநோட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறு மத்திய வங்கி பொது மக்களை கோரியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் சேதமாக்கப்பட்ட பண நோட்டுக்களுக்கு எந்த வித பெறுமதியும் கிடையாது எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது.

வேண்டுமென்றே பண நோட்டுக்களை சேதமாக்கியோ அல்லது எழுதி, சிதைத்தோ இருந்தால் அவ்வாறான பண நோட்டுக்களை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகையவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கவோ சிறைத் தண்டனை வழங்கவோ முடியும் எனவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது. அவ்வாறன பணம் வைத்திருப்போர் இந்த மாத இறுதிக்குள் வங்கிகளில் செலுத்தி அவற்றுக்குப் பதிலாக வேறு செல்லுபடியான நோட்டுக்களை பெறுமாறும் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com