டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல்

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை பார்வையிடுவதற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் த ரஞ்சித் சிங் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு 06.03.2017 அன்று விஜயம் செய்தார்.

இந்த புதிய கட்டடத்தை மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அத்தோடு இந்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட இருப்பதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

150 கட்டில்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

06.03.2017 அன்று இடம்பெற்ற இந்த விஜயத்தில் இலங்கைக்கான இந்திய பிரதி தூதுவர் ராதா வெங்கட்ராமன், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திலின விஜயதுங்க மற்றும் வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com