டளஸிற்கு பதில் யாபா; பந்துலவுக்கு பதில் திலகசிறி

14114789_10154302112206327_721687628437112817_oமாத்தறை மாவட்டத்தின் ஶ்ரீ.ல.சு.க. தலைமை பதவி, இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (19), முன்னாள் அமைச்சரும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினருமான டளஸ் அளகப்பெரும, குறித்த பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இன்றைய தினம் (22) ஜனாதிபதியால் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.

அத்துடன், ஹோமாகம பிரதேசத்தின் புதிய அமைப்பாளராக காமினி திலகசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம பிரதேச அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இராஜினாமா செய்வதாக நேற்று (21) அறிவித்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே குறித்த நியமனங்கள் இன்று வழங்கப்பட்டிருந்தது.13996304_10154302112186327_3099117816124236024_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com