இயற்கைச் சமநிலையைக் குழப்பும் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுத்தல் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து இளைஞர்கள் முல்லைத்தீவு நோக்கி பயணிக்கவுள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) காலை 08 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இளைஞர்கள் புறப்படவுள்ள அதேவேளை ஏனைய மாவட்டங்களில் இருந்தும் புறப்படும் இளைஞர்களுடன் கைகோர்த்து பயணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர்கள் தங்கள் சமூக வலைத்தள படங்களையும் மாற்றிவருகின்றனர்.