ஞானசார தேரர் தலைமறைவா ? பொலிசார் தேடுதல் வேட்டை !

பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து மிரட்டல் விடுவித்தமை, இனங்களுக்கிடையே ஒற்றுமையை குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டமை தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஞானசார தேரரை கைது செய்வதற்காக, பல பொலிஸ் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, ஞானசார தேரருக்கு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க அலுத்கடை இல 04 நீதவானினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தேரருக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள, முறைப்பாடுகள் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக, திட்டமிட்ட குற்றப் பிரிவிற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com