ஜ.தே.க, ஈ.பிடி.பி, சுதந்திரக்கட்சி, ஆதரவுடன் வவுனியா நகரசபையைக் கைப்பற்றியது ஈ.பி.ஆர்.எல்.எவ்

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெருமுன ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த  கௌதமன் வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவாகியுள்ளார்.

வவுனியா நகரசபைக்கான சபை அமர்வு இன்று (16) காலை இடம்பெற்றது.

இதன்போது  தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்த ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த கெளதமன்  வவுனியா நகரசபையின் தலைவராக  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாகலிங்கம் சேனாதிராசாவும் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் தவிசாளர் தேர்விற்காக முன்மொழியப்பட்டனர்.

பகிரங்க வாக்களிப்பாக நடைபெற்ற வாக்களிப்பில் சேனாதிராசா 09 வாக்குகளையும் கௌதமன் 11 வாக்குகளையும் பெற்றனர்.

இதேவேளை உப தவிசாளராக சுதந்திர கட்சியின் குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாக்கெடுப்புக்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடுநிலை வகித்திருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com