ஜோதிடரின் கருத்தின் பின்னணியில் ஜனாதிபதியை படுகொலை செய்யும் சதித்திட்டம் இருக்கலாம்

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே 2017ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி உயிரிழக்கலாம் என, எழுந்த அனுமானத்தின் பின்னணியில் கொலைச் சதித் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவே தெரிகிறது என  தெரிவித்துள்ளார்.

இது பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் தான் கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜித் ரோஹன விஜயமுனி எனும் ஜோதிடர் ஒருவர் ஜனாதிபதி ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் உயிரிழக்கலாம் என தெரிவித்தாக, சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரவின.

இது குறித்து இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வினவப்பட்ட போதே நிமல் போபகே மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் நிமால் போபகே இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்

இந்த ஜாதக கணிப்பு உண்மைக்கு புறம்பானது. இதுதொடர்பான ஆவணங்களை கொண்டு ஒப்பிட்டு பார்த்ததன் மூலம் இது உண்மைக்கு புறம்பானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியாகியுள்ள ஜோதிடரின் ஜாதகக் கணிப்பின் பின்னணியை கண்டறிவதற்காக பொலிஸ்மா அதிபரிடம் அது தொடர்பான காணொளி கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சமூக இணையத்தளத்தின் மூலம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுவரும் இந்த காணொளி தொடர்பாக ஆழமாக ஆராய்ந்தால் இதன் உள்நோக்கத்தினை நாம் கண்டறியமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com