ஜேர்மன் நாட்டின் அனுசரணையில் வடக்கில் உணவு முகாமைத்துவம் தொடர்பான 3 ஆண்டு செயற்றிட்டம்

இலங்கை மற்றும் ஜேர்மன் நாடுகளிற் கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தரமான உணவு முகாமைத்துவம் தொடர்பான செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவுள்ள இச்செயற்றிட்டத்தில் வர்த்தகர்கள், ஹோட்டல்கள், உணவகத்தினை, உள்வாங்கி 300 பேரிற்கான செயற்றிட்டத்தினை முன்னெடுக்கவுள்தாக தெரிவித்துள்ளனர்.
உணவு உற்பத்தியினை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு இச்செயற்றிட்டம் உதவுவதோடு யாழ்ப்பாணத்திலிருந்து தரம் வாய்ந்த உணவினை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயற்றிட்டத்தில் பனை வளம், நீர், உணவு தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
வட மாகாணம் முழுவதுமாக செயற்படுத்தப்படவுள்ள இச்செயற்றிட்டத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா மாவட்டங்களை மையமாக வைத்து நடைமுறைப்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com