ஜெயலலிதா சொத்து வழக்கு:மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க கர்நாடக அரசு கடிதம்!

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 6 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.  

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்  ஜெயலலிதா,அவரின் தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளது. இதே போல் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணை நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீது 3 வாரத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருகிற 12 ஆம் தேதி மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற  பதிவாளரிடம் கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 6 வார கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds