சற்று முன்
Home / செய்திகள் / ஜெனீவா செல்கிறார் சிவாஜி !

ஜெனீவா செல்கிறார் சிவாஜி !

(பதிவு செய்த நாள் – புரட்டாதி 13, 2015, 07.44 பி.ப)  எதிர்வரும் சில தினங்களில் தான் உள்ளிட்ட குழுவினர் ஜெனிவா செல்லவுள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் யாழில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாளை மனு ஒன்றை கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் எனக்கோரி கிளிநொச்சியிலிருந்து நான்காவது நாளாக நடைபவனியினை மேற்கொண்டிருக்கும் அவர் இன்று கைதடியை வந்தடைந்தார். நாளை காதடியிலிருந்து ஆரம்பமாகும் நடைபவனி யாழ் நகர் ஊடக சங்கிலியன் தோப்பினைச் சென்றடையவுள்ளதாகவும் அதன்போது இந்த மனு கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com